நீங்கள் செய்ய எண்ணியதைச் செய்து காட்டுவேன்... தந்தையர் தினத்தையொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
தந்தையர் தினத்தையொட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.
சென்னை,
இன்று ஜூன் 18 உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில் தந்தையர் தினத்தையொட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் ,
உங்களால் கருவானேன், உங்களால் செதுக்கப்பட்டேன், நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன்.
உம்மை மனதில் நினைத்தே நித்தமும் செயல்படுகிறேன், நீங்கள் செய்ய எண்ணியதைச் செய்து காட்டுவேன்.என தெரிவித்துள்ளார்.