இளையரசனேந்தல் ஸ்ரீபேப்பர் ஆனந்தா வித்யாலயாபள்ளி விளையாட்டு விழா
இளையரசனேந்தல் ஸ்ரீபேப்பர் ஆனந்தா வித்யாலயா பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள இளையரசனேந்தல் ஸ்ரீ பேப்பர் ஆனந்தா வித்யாலாயா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 10-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வைஷ்ணவி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர்கள் பவானிரமேஷ், கோபிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் லாவண்யா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அங்கு உள்ள கொடிக்கம்பத்தில் நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி நிர்வாகிகள் அப்பாசாமி, ராஜேஸ்வரி, சிவராமரமேஷ்குமார், ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியைகள் தாளபுஷ்பம், சித்ரதேவி, நந்திதா, ரூபி, சுந்தரி மற்றும் பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.