தேசிய பொறியியல் அகாடமி உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் தேர்வு

சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சுஜித், அமெரிக்காவில் உள்ள தேசிய பொறியியல் அகாடமியின் சர்வதேச உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

Update: 2023-02-14 18:44 GMT

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சுஜித், அமெரிக்காவில் உள்ள தேசிய பொறியியல் அகாடமியின் சர்வதேச உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். பொறியியல் துறையில் அவர் ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் வகையில் குறிப்பாக 'பொறியியல் அமைப்புகளில் உள்ள உறுதியற்ற தன்மைகளைப் புரிந்துகொண்டு இயக்கவியல் அமைப்புகளில் அவற்றைப் பயன்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் எப்படி?' என்பது குறித்த பங்களிப்பிற்காக அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

பேராசிரியர் சுஜித் 1988-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.-ல் விண்வெளி பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து 1990-ல் எம்.எஸ். பட்டமும், 1994-ல் அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பி.எச்டி பட்டமும் பெற்றார். 390-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வெளியீடுகளை இவர் அளித்துள்ளார்.

இயக்கவியல் அமைப்புகள் மற்றும் சிக்கலான அமைப்புகளுக்கான கோட்பாடுகளைப் பயன்படுத்தி தெர்மோகோஸ்டிக் உறுதியற்ற தன்மையை எவ்வாறு குறைப்பது? என்ற ஆய்வில் பேராசிரியர் சுஜித் தற்போது ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்