ஐ.எப்.எஸ். நிதிநிறுவன முகவர் வீட்டை முதலீட்டாளர்கள் முற்றுகை

நெமிலியில் ஐ.எப்.எஸ். நிதிநிறுவன முகவர் வீட்டை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-06-03 17:35 GMT

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி சத்திர தெருவை சேர்ந்தவர் ஜெகன்நாதன்.

இவர் ஐ.எப்.எஸ். நிதிநிறுவனத்தில் முகவராக பணிபுரிந்து வந்தார்.

வேலூரை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் கிளை அலுவலகங்களை ஆரம்பித்து கடந்த 4 ஆண்டுகளாக ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த நிதி நிறுவனம் ரூ.1 லட்சத்துக்கு மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதிக வட்டி தருவதாக கூறி ஆசை காட்டி பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஜெகன்நாதனின் வீட்டில் மற்றொரு முகவர் விஜயகுமார் இருப்பதாக முதலீட்டாளர்களுக்கு தகவல் பரவியது. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் ஜெகன்நாதனின் வீட்டை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்தவுடன் நெமிலி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் விரைந்து வந்து முதலீட்டாளர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் முதலீட்டாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்