புகையிலை பொருட்கள் விற்றால் வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்

புகையிலை பொருட்கள் விற்றால் வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளாா்.

Update: 2022-07-04 17:26 GMT

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கான திறனாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெல்லும் புகையிலை, குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் புற்று நோயை உண்டாக்குவதால் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், விதிகளை மீறி தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை மற்றும் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் இடங்களை, நிறுவனங்களை, கடை களை, நபர்களை கண்டறிந்தால் உடனே பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையின் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்