'சனாதனம் வீழ்ந்தால் பாரதமும் வீழும்' - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

சனாதான தர்மம் எந்த ஒரு ஏற்ற தாழ்வையும் வலியுறுத்தவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.;

Update: 2024-04-13 15:11 GMT

சென்னை,

சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகள் சன்னியாசம் பெற்ற 50-வது ஆண்டு விழா சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் போர், காலநிலை மாற்றம் என அழிவை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கக் கூடிய சூழலில், பாரதம் தற்போது விழித்துள்ளதாக குறிப்பிட்டார்.

பாரதம் சனாதனத்தால் கட்டமைக்கப்பட்டது என்றும், உலக நாடுகள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கினாலும், பாரதம் பொருளாதார வளர்ச்சியோடு முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார். சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் என்று அரவிந்தர் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய கவர்னர் ஆர்.என்.ரவி, சனாதான தர்மம் எந்த ஒரு ஏற்ற தாழ்வையும் வலியுறுத்தவில்லை என்று தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்