மக்கள் இப்படிச் செய்தால் தக்காளி விலை குறையும் எச்.ராஜா யோசனை..!

திருச்சியில் செய்தியாளர் சந்தித்த எச்.ராஜா மக்கள் இப்படிச் செய்தால் தக்காளி விலை குறையும் எனக் கூறியுள்ளார்.

Update: 2023-07-18 09:09 GMT

திருச்சி,

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாகவே அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில் காய்கறிகள் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்டவை தங்கத்தின் விலையைப் போலத் தினமும் அதிகரித்து வருகிறது.

சென்னை கோயம்பேட்டில் கடந்த சில நாட்களாகத் தக்காளியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. நேற்று கிலோ ரூ.120க்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று ரூ.125க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர் தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு 5 நாட்கள் தக்காளி பயன்படுத்துவதை மக்கள் தவிர்த்தால் அதன் விலையைக் குறைத்துவிடலாம் எனச் செய்தியாளரின் கேள்விக்கு எச்.ராஜா பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்