மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள்
பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசின் தேசிய அடையாள அட்டை 40 பேருக்கு வழங்கப்பட்டது. மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டைக்கு 48 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முகாமில் சமூக நலத்துறை தனி தாசில்தார் திருமால், எலும்பு முறிவு டாக்டர் கலைச்செல்வன், காது கேளாதோருக்கான டாக்டர் பாலமுருகன், மனநல டாக்டர் மங்கையர்க்கரசி, கண் டாக்டர் காமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.