மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்த நாளிலேயே அடையாள அட்டை

மருத்துவ பரிசோதனை நடந்த நாளிலேயே அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாலம் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.;

Update: 2023-07-12 12:42 GMT

போளூர்

மருத்துவ பரிசோதனை நடந்த நாளிலேயே அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாலம் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.

போளூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு தாசில்தார் சஜேஷ்பாபு தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். கோட்டாட்சியர் மா.தனலட்சுமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அவரிடம் மொத்தம் 23 மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் பட்டா மாற்றம், 100 நாள் அடையாள அட்டை ஆகிய 2 மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

அப்போது கோட்டாட்சியர் பேசுகையில் ''மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நடக்கும் சிறப்பு முகாமிற்கு சென்று மனுக்கள் அளித்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து தகுதி உள்ளவர்களுக்கு அன்றைய தினமே அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.

இதில் தேர்தல் துணை தாசில்தார் என்.ரமேஷ், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் இளைய குமார், மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்