திருநங்கைகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்
திருநங்கைகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்
திருநங்கைகள் புதிதாக அடையாள அட்டை வேண்டி விண்ணப்பிக்க, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது.
இந்த முகாமில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் கலந்து கொண்டு, பழைய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் இணையதள அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் ஆதார் அட்டையுடன் தங்களின் விவரத்தினை பதிவு செய்து கொண்டனர்.