ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக மீண்டும் ராகுல்நாத் நியமனம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக மீண்டும் ராகுல் நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-05-22 21:51 GMT

சென்னை,

தமிழ்நாடு பைபர் நெட் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கமல் கிஷோர், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக அவரை நியமனம் செய்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் பால் உற்பத்தி மற்றும் பால் பொருள் மேம்பாட்டு ஆணையராக இருந்த சுப்பையன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு கலெக்டர்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக ராகுல் நாத்தை நியமனம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. அவர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக பணியை தொடருவார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக செந்தில் ராஜை நியமித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. அவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக தொடர்ந்து நீடிப்பார்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்படுகிறார். அவர் பால் உற்பத்தி மற்றும் பால் பொருள் மேம்பாட்டு இயக்குனராகவும் செயல்படுவார்.

ககன்தீப்சிங் பேடி

மாற்றுத்திறனாளிகள் நலன் இயக்குனராக வினித்தை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன் தொல்லியல் ஆணையராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் முதன்மை செயலாளராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்