தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளராக அந்தஸ்து உயர்வு

தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-12-06 15:22 GMT

சென்னை,

தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.விஜயகுமார், சுற்றுலா, கலை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் ஆகியோர் முதன்மைச் செயலாளர் நிலையில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்