முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

Update: 2023-05-13 12:19 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.*முதல் அமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம்

*சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம்

* நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதல் அமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம்

* ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம்

*போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம்

* சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம்

* சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம்

* சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம்

* உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம். 

Tags:    

மேலும் செய்திகள்