இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-20 21:08 GMT

வடக்கன்குளம்:

பழவூர் அருகே மாறன்குளத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் மதன் (வயது 20). இவர் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் பழகி வந்தார். சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மதன் தண்ணீர் பாட்டிலால் அந்த இளம்பெண்ணை தாக்கினார். இதில் காயமடைந்த அவர், பழவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்