அ.தி.மு.க.வின் தொடர் பயணம் வெற்றிப்பயணமாக அமைய வாழ்த்துகிறேன்' - ஜி.கே.வாசன்

சட்டவிதியின்படி தீர்ப்பு வெளிவந்திருப்பது பாராட்டுக்குரியது.

Update: 2023-02-23 07:56 GMT

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு அ.தி.மு.க.வின் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்திருப்பது ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினருக்கு புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது. சென்னை ஐகோர்ட்டு அ.தி.மு.க வின் பொதுக்குழு தொடர்பாக அளித்த தீர்ப்பு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பானது வெளிப்படுத்துகிறது.

சட்டவிதியின்படி தீர்ப்பு வெளிவந்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு சம்பந்தமாக நடைபெற்ற வழக்கின் விசாரணையின் முடிவில் இன்றைக்கு வெளிவந்திருக்கும் தீர்ப்பானது அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளருக்கும், அ.தி.மு.க.வின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும்.

அ.தி.மு.க.வின் தொடர் பயணம் இரட்டை இலை சின்னத்துடன் வெற்றிப்பயணமாக அமைய த.மா.கா. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலனும், அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்