டி.டி.வி.தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் - மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
டி.டி.வி.தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்வதற்காக, மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழக பட்ஜெட் வருகிற 20-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் வெளிவந்தவுடன் என்னுடைய கருத்தை கூறுவேன். வாய்ப்பு இருந்தால் உறுதியாக டி.டி.வி.தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். விரைவில் சசிகலாவையும் சந்திப்பேன். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை தொடக்கத்தில் இருந்து தற்போது வரை சட்ட நியதிக்கு புறம்பாக இருக்கிறது. இது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.