புதிய இந்தியாவை படைப்போம்...வாருங்கள்...ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க கமல்ஹாசன் அழைப்பு...!

என்னை 'சக மனிதராக' பங்கேற்க அழைத்ததால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் நாளை பங்கேற்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Update: 2022-12-23 12:06 GMT

சென்னை,

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி பாரத ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை (24-ந்தேதி) டெல்லியில் நடைபயணம் செல்கிறார். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அவருடன் கட்சி நிர்வாகிகள், மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் நடைபயணத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இந்தநிலையில், டெல்லியில் நாளை ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொள்வதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். புதிய இந்தியாவை படைப்போம்....வாருங்கள்...என்னை 'சக மனிதராக' பங்கேற்க அழைத்ததால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் நாளை பங்கேற்பதாகவும், டெல்லி வாழ் தமிழர்கள் திரளாக கலந்துகொள்ள அழைப்பு விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்