'நான் மீண்டும் சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன்' திருமாவளவன் எம்பி சொல்கிறார்

‘நான் மீண்டும் சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன்’ என்று திருமாவளவன் எம்பி கூறினாா்.

Update: 2023-06-27 20:30 GMT

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மீண்டும் நான் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. நடராஜர் கோவிலில் நடக்கும் பிரச்சினைக்கு அரசும், சட்டமும் சொல்வதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தந்து பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும்.

திரைத்துறையில் நடித்து வருபவர்களை முதல்-அமைச்சராக தேடும் நிலை தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை யூகமாக எழுதி வரும் நிலையில், இதை நான் எதிர்க்கவில்லை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்