முதல்-அமைச்சர் வரும்போது குடும்பத்துடன் தீக்குளிப்பேன்

திருப்பத்தூர், ஜூன்.7- புகார் மனு மீது நடவடிக்க எடுக்காவிட்டால் முதல்-அமைச்சர் திருப்பத்தூர் வரும்போது குடும்பத்துடன் தீக்குளிப்பேன் என்று கலெக்டரிடம் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மனு கொடுத்துள்ளார்.

Update: 2022-06-06 18:08 GMT

திருப்பத்தூர்

புகார் மனு மீது நடவடிக்க எடுக்காவிட்டால் முதல்-அமைச்சர் திருப்பத்தூர் வரும்போது குடும்பத்துடன் தீக்குளிப்பேன் என்று கலெக்டரிடம் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மனு கொடுத்துள்ளார்.

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபற்றது. பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, குடிநீர், சாலை வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 365 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

குடும்பத்துடன் தீக்குளிப்பேன்

கூட்டத்தில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் எனது நிலம் சம்மந்தமாக எனக்கும், எனது தம்பிக்கும் பிரச்சினை உள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்-அமைச்சர் திருப்பத்தூர் வரும் போது குடும்பத்துடன் தீக்குளிப்பேன் என மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதேபோல் திருப்பத்தூர் அருகே மொளகம்பட்டி பகுதியை சேர்ந்த லிங்கன் மற்றும் அவரது மனைவி ராஜம்மாள் ஆகியோர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் எனது மகனுக்கு எழுதி கொடுத்த சொத்தை அவரது மனைவி பெயருக்கு மாற்றிக்கொண்டு எங்களை பராமரிக்காமல் விட்டுவிட்டனர். அதனால் அந்த சொத்தை மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல்வாழ்வு சட்டப்படி மீட்டு தரவேண்டும் என கண்ணீருடன் மனு அளித்தனர்.

பெட்ரோல் ஸ்கூட்டர்கள்

கூட்டத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.67 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை நல்லதம்பி எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஹரிஹரன், மோகன குமாரன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கே.எஸ்.அன்பழகன், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்