திருப்பத்தூர் மாவட்ட மக்களை என்றும் நினைவில் கொள்வேன்

திருப்பத்தூர் மாவட்ட மக்களை என்றும் நினைவில் கொள்வேன் என்று மாறுதலாகி செல்லும் கலெக்டர்் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

Update: 2023-02-07 17:31 GMT

சாமி தரிசனம்

வேலூரில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு இரண்டாவது கலெக்டராக அமர்குஷ்வாஹா 15.6.2021 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் கலெக்டர் அமர்குஷ்வாஹா சென்னைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு பதில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (புதன்கிழமை) திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்கிறார். மாறுதலாகி செல்லும் கலெக்டர் அமர்குஷ்வாஹா தனது மனைவியுடன் திருப்பத்தூர் மாய விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நினைவில் கொள்வேன்

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள். பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களை மறக்க முடியாது. அவர்களை என்றும் நினைவில் கொள்வேன். திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 மாத காலம் பல்வேறு பணிகள் நடைபெற்று உள்ளது. பல்வேறு துறைகளில் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

தற்போது விடைபெறுகிறேன். மீண்டும் சமூக நலத் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வரும்போது தங்களை சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் அனைத்து துறை சார்பில் கலெக்டருக்கு பாராட்டி பரிசு வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்