முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம்பெற வேண்டிக் கொள்கிறேன் - அண்ணாமலை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டி தலைவர்கள் பலரும் தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.

Update: 2023-11-05 04:29 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவரின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சில நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டி தலைவர்கள் பலரும் தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விரைவில் குணமடைய வேண்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம்பெற்று, மக்கள் பணிகளைத் தொடர வேண்டிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதைபோல மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்