கச்சத்தீவை மீட்க "குரல் நான் தான் கொடுக்க வேண்டும்" அவர் மீட்க வேண்டும் - சீமான்

அண்ணாமலை கச்சத்தீவை மீட்க வேண்டும், அவர் தான் முழு அதிகாரத்தில் உள்ளார் என சீமான் கூறியுள்ளார்.

Update: 2022-08-15 11:55 GMT

கடலூர்,

இந்தியாவிற்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு பின்னர் தமிழக மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். கச்சத்தீவு ஒப்பந்தத்தில் 1972-ம் ஆண்டு சில திருத்தங்கள் செய்ததால் அந்த தீவில் மீனவர்கள் படகுகளை நிறுத்தி ஓய்வெடுக்க முடியாமலும், வலைகளை உலர்த்த முடியாமலும் போனது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது தவறு என்று கூறி தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

கச்சத்தீவால் இலங்கைக்கு எந்த பயனும் இல்லை. அது நமக்குத்தான் வேண்டும். தமிழக மீனவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்பது தான். அதே நோக்கத்தை தான் பாஜகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கச்சத்தீவால் இலங்கைக்கு எந்த பயனும் இல்லை என்றும் கச்சத்தீவை மீட்க குரல் கொடுப்பேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்நிலையில் கச்சத்தீவை மீட்க நான் தான் குரல் கொடுப்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக சீமான் கூறுகையில்,

கச்சத்தீவை மீட்பதற்கு நான் தான் குரல் கொடுப்பேன். அண்ணாமலை கச்சத்தீவை மீட்க வேண்டும். அவர் தான் முழு அதிகாரத்தில் உள்ளார். அவர் முழு அதிகாரத்தில் இருந்து கொண்டு எங்களுடன் சேர்ந்து குரல் கொடுப்பேன் என்று கூற கூடாது. அவர் கச்சத்தீவை மீட்க வேண்டும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்