"அரசியல் எனக்கு தேவையில்லை": நடிகர் வடிவேலு அதிரடி முடிவு
"அரசியல் எனக்கு தேவையில்லை" என்று நடிகர் வடிவேலு அதிரடியாக தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு நடிகர் வடிவேலு வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் தற்போது 'நாய் சேகர் ரிட்டன்', 'மாமன்னன்', 'சந்திரமுகி-2' உள்ளிட்ட புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறேன். அரசியல் எனக்கு தேவையில்லை. சினிமாவில் இருந்து கொண்டே நன்மை செய்யலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போண்டாமணிக்கு உதவி செய்வேன். தி.மு.க. அரசின் ஆட்சி நன்றாக உள்ளது.
இவ்வாறு வடிவேலு கூறினார்.