சுதந்திர தின விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

Update: 2022-08-16 18:49 GMT

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

கொள்ளிடம்

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணை தலைவர் பானுசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பந்தம், கோவிந்தராஜ், மாரிமுத்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயபாரதி, முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் செல்லசேதுரவிக்குமார், மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

இதேபோல்கொள்ளிடம் பொதுப்பணித்துறை அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சுதந்திர தின விழா நடந்தது. கடைக்கண் விநாயகநல்லூர் ஊராட்சி மயிலை கோயில் கிராமத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஜயபாரதி தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசினார். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகராஜன், இளவரசு. மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

சீர்காழி

சீர்காழி நகராட்சி வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பராயன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். செயல் அலுவலர் அசோகன் முன்னிலை வகித்தார். வரி தண்டலர் அமுதா வரவேற்றார். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய ஆணையர் அன்பரசன், ஒன்றியக்குழு துணை தலைவர் மகேஸ்வரி முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் ஆதி.ஜெயராமன் வரவேற்றார்.

விழாவில் மாவட்ட கவுன்சிலர்கள் இளையபெருமாள், சுரேஷ், குமாரசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் காந்தி, மோகன், ராஜேந்திரன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செம்பனார்கோவில்

செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தேசியக்கொடியை ஏற்று வைத்தார்.இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பேசினார். விழாவில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் மைனர்பாஸ்கர், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் சுகுணசங்கரி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதில் துணை தலைவர் பொன்.ராஜேந்திரன், செயல் அலுவலர் பூபதிகமலக்கண்ணன உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் செம்பனார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ரமா தலைமையில் நிவேதா முருகன், எம்.எல்.ஏதேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

மணல் மேடு

மணல்மேடு பேரூராட்சியில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் கண்மணி அறிவழகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்