பணிகள் குறித்து எனக்கு தகவல் தெரிவிப்பதில்லை

பாரத பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் பணிகள் குறித்து எனக்கு தகவல் தெரிவிப்பதில்லை என மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் குற்றம்சாட்டினார்.

Update: 2023-01-11 18:45 GMT

பாரத பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் பணிகள் குறித்து எனக்கு தகவல் தெரிவிப்பதில்லை என மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் குற்றம்சாட்டினார்.

ஒன்றியக்குழு கூட்டம்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக்குழு சிறப்புக் கூட்டம் அதன் அவை கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் அன்பரசன், ஒன்றியக்குழு துணை தலைவர் மகேஸ்வரிமுருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

சேதமடைந்த சாலை

காந்தி (தி.மு.க.):-மக்கள் பிரதிநிதிகளான ஒன்றிய குழு உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வராமல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காளி- அபிமானபுருஷன் வெள்ளாளர் தெரு சுடுகாட்டு பாதையை சீரமைக்க வேண்டும்.

அர்ஜுன் (தி.மு.க.):- குளிச்சார் ஊராட்சி அரும்பூர் சாலை பல ஆண்டு காலமாக மோசமாக உள்ளது. அதனை உடனே சீரமைத்து தர வேண்டும்.

ரெயில்வே மே்பாலம்

சிவக்குமார் (தி.மு.க.):- மாப்படுகை ெரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் மணிக்கணக்கில் மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க

கல்லணை சாலையில் உள்ள மாப்படுகை அவையாம்பாள் நகரில் இருந்து கும்பகோணம் சாலையில் உள்ள சித்தர்காட்டை இணைக்கும் வகையில் காவிரியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும்.

முருகமணி (தி.மு.க.):- நல்லத்துக்குடியிலிருந்து பட்டமங்கலம் வரை செல்லும் இணைப்பு சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும்.

எனக்கு தெரிவிப்பதில்லை

தலைவர்(காமாட்சி மூர்த்தி):- மயிலாடுதுறை ஒன்றியம் தலைஞாயிறு ஊராட்சியில் சமீபத்தில் பாரதப் பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணியின் தொடக்க நிகழ்ச்சி குறித்து எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இதே போல மேலும் சில பகுதிகளில் தொடங்கப்பட்ட சாலை பணிகள் குறித்தும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை.

அதேசமயம் அந்த சாலைக்கான நிதியை பெற ஊராட்சி ஒன்றியக்குழுவில் மட்டும் அனுமதி கேட்கிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்? உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தெரியாமல் எப்படி சாலை அமைக்கும் பணியை தொடங்கினீர்கள், இதுகுறித்து விளக்கம் வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய மேலாளர் ஆதி ஜெயராமன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்