ரூ.3,000 கோடி கடனுதவி பெற அமெரிக்கா செல்கிறேன் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விக்கிரவாண்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.;
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், விக்கிரவாண்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், உலக வங்கியில் ரூ.3,000 கோடி கடன் வாங்க உள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ரூ.3,000 கோடி கடனுதவி பெற நாளை (ஜூலை 01) அமெரிக்கா செல்ல உள்ளேன். மருத்துவத் துறை திட்டங்களை செயல்படுத்த உலக வங்கியில் ரூ.3,000 கோடி கடனுதவி கேட்க உள்ளேன்." என தெரிவித்தார்.