வீட்டு பத்திரத்தை கொடுக்க மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் - நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.;
நெல்லை,
நெல்லை மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்த தம்பதி ஆறுமுகம் மற்றும் வேலம்மாள். ஆறுமுகம் குடித்து விட்டு அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை அவர் தனது மனைவியிடம் வீட்டை விற்க பத்திரத்தை கேட்டு பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.
வீட்டு பத்திரத்தை கொடுக்க மறுத்ததால், தனது மனைவியை ஆறுமுகம் அரிவாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளார். கணவனிடமிருந்து தப்பிய வேலம்மாள், சுத்தமல்லி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
அவரை காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது வீட்டின் பீரோவிற்கு தீ வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.