மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கணவர் கைது

திசையன்விளை அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-31 21:06 GMT

திசையன்விளை:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமன்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி பிச்சை (வயது 65). இவருடைய மனைவி ஜெயலட்சுமி (60). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கணவன்- மனைவி இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் உவரி அந்தோணியார் கோவிலுக்கு வந்து இருந்தனர். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தனர்.

அதன்படி அந்தோணி பிச்சை காய்கறி வெட்டும் கத்தியால் மனைவி ஜெயலட்சுமியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அதே கத்தியால் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உவரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்தோணி பிச்சையை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்பு குணம் அடைந்தார். நேற்று அவரை உவரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்