தேன்கனிக்கோட்டை: பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-06 19:30 GMT

தேன்கனிக்கோட்டை:-

தேன்கனிக்கோட்டை தாலுகா பள்ளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராயப்பா மகன் ராமப்பா (வயது 41). இவருக்கும், மாதுரி (29) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன்- மனைவி இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று தகராறு ஏற்படவே மனைவியை, ராமப்பா திட்டி விட்டு வங்கிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

திரும்பி வந்து பார்த்த போது மாதுரி வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மனைவியை தற்கொலைக்கு தூண்டியாக ராமப்பாவை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்