நாகை: மனைவியை மூங்கில் கம்பால் அடித்து கொலை செய்த கணவன் கைது..!

நாகூர் அருகே குடிபோதையில் இருந்த கணவன் தன் மனைவியை முங்கில் கம்பினால் அடித்து கொலை செய்துள்ளார்.

Update: 2022-06-04 05:13 GMT

நாகை:

நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள கடம்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சினைப்பா மகன் சிங்காரு (எ) சிங்காரவேல் (வயது 53). இவருக்கு முத்துலெட்சுமி (48) என்ற மனைவியும், ஹேமலதா (26), பவித்தீரா (24), ஐஸ்வர்யா (23), பிரகதீ (22) ஆகிய 4 பெண் மகள்களும் உள்ளனர்.

முதல் இரண்டு மகள்களுக்கு திருமணமாகியுள்ளது. சிங்காரவேலுக்கும், மனைவி முத்துலெட்சுமிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தினதோறும் குடிபோதையில் மனைவி முத்துலெட்சுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில நேற்று இரவு சிங்காரவேல் குடிபோதையில், வீட்டில் வழக்கம் போல் வந்து மனைவி முத்துலெட்சுமியிடம் தகராறு செய்து உள்ளார். தகராறு அதிகமானதால் சிங்காரவேலு மனைவி முத்துலெட்சுமியை மூங்கில் கம்பால் தலையில் அடித்துள்ளார்.

இதை பார்த்த, முத்துலெட்சுமியின் மூத்த மகள் ஹேமலதா என்பவர் தடுத்துள்ளார். சிங்காரவேல், மகள் ஹேமலதாவை கீழே தள்ளிவிட்டு முத்துலெட்சுமியை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட முத்துலெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த சிங்காரவேலுவை போலீசார் தேடி வந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் சோழிங்கநல்லூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற நாகூர் போலீசார் அங்கு மறைந்திருந்த சிங்காரவேலு கைது செய்தனர்.

சிங்காரவேலு மகள் ஹேமலதா கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளில் கீழ் வழக்குகள் பதிவு செய்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது நாகூர் மற்றும் சுற்றுவட்டார காவல் நிலையகளில் பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்