மனைவியை தாக்கிய கணவன் கைது
நெமிலி அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது செய்யப்பட்டார்.
நெமிலியை அடுத்த ஜாகீர்தண்டலம் கண்டிகை, பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவரது மனைவி குணசுந்தரி (50). இவர்கள் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்துவருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மனைவியை சந்திக்க ராஜேந்திரன் சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு ராஜேந்திரன், தனது மனைவியை கடுமையாக தாக்கிவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.