மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது;

Update:2022-08-07 02:54 IST

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே உள்ள எஸ்.டி. மங்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது38). இவருடைய மனைவி மனோஷீலா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஸ்டீபன் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஸ்டீபன் மது போதையில் மனைவியிடம் தகராறு செய்து மது பாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மனோஷீலா குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்