மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது;

Update:2022-08-05 02:44 IST

பேட்டை:

நெல்லை அருகே சுத்தமல்லி யாதவர் தெருவை சேர்ந்தவர் திருமலைகுமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 33). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் திருமலைகுமார் மனைவி கிருஷ்ணவேணியை அவதூறாக பேசி தாக்கியதுடன் அரிவாளால் வெட்டி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணவேணி சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து திருமலைகுமாரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்