பள்ளி ஆசிரியையை தாக்கிய கணவர் கைது

நிலக்கோட்டையில் பள்ளி ஆசிரியையை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-05 19:00 GMT

சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). இவரது மனைவி பாண்டீஸ்வரி (37). இவர் நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. கோர்ட்டில் விவகாரத்து வழக்கும் நடந்து வருகிறது. இந்நிலையில் நிலக்கோட்டையில் வசித்து வரும் பாண்டீஸ்வரி வீட்டுக்கு கணேசன் வந்தார். அங்கு அவரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் பாண்டீஸ்வரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்ட்ராஜ் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்