விருதுநகரில் தனியார் பஸ் கார் மீது மோதியதில் கணவன் மனைவி பலி; குழந்தைகள் கண் முன்னே நடந்த பரிதாபம்

விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கார் மீது தனியார் பஸ் மோதியதில் தனியார் நிறுவனமேலாளரும் மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-07-09 11:08 GMT

விருதுநகர்:

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (வயது 37). இவர் இருசக்கர வாகன நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்திஷா (32) பள்ளி ஆசிரியை. இவர்களது குழந்தைகள் ஜெனிதா ஸ்ரீ (9) பிரசன்ன ஆதித்யா (8).

இந்நிலையில் மனோஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஒட்டி வந்தார்.

இன்று மதியம் 12 மணியளவில் மனோஜ் ஓட்டி வந்த கார் விருதுநகர் புறவழிச்சாலையில் எம்ஜிஆர் சாலை சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்த போது சாத்தூரில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் தனியார் பஸ் விருதுநகர் பழைய பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக எம்ஜிஆர் சாலையில் திரும்பிய போது கார் மீது திடீரென மோதியது.

தனியா பஸ் கார்மீது மோதியதில் காரை ஓட்டி வந்த மனோஜ் மற்றும் அவரது அருகில் இருந்து அவரது மனைவி நிதிஷா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இரு குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த விருதுநகர் பஜார் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த குழந்தைகள் இருவரையும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தைகள் இருவரின் கண்முன்னேயே அவர்களது பெற்றோர் பரிதாபமாக இறந்த சம்பவம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் தனியார் பஸ் டிரைவர் இவந்தைக் குளத்தைச் சேர்ந்த ஞானகுரு (37) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்