கணவன்- மனைவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையம் முன்பு கணவன்- மனைவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-06-15 17:13 GMT

திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையம் முன்பு கணவன்- மனைவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாக பிரிவினை

திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் அவரது 2 மகன்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சொத்தை பாகப்பிரிவினை செய்து வைத்தார். அப்போது மூத்த மகனுக்கு 1½ ஏக்கர் நிலமும், 2-வது மகனுக்கு 2½ ஏக்கர் நிலமும் என பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மூத்த மகன் வறுமையினால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மூத்த மகன் தந்தையிடம் தனக்கு கூடுதலாக நிலம் வழங்க கேட்டு உள்ளார். இதையடுத்து முதியவர் 2-வது மகனிடம் ½ ஏக்கர் நிலத்தை அவரது அண்ணனுக்கு கொடுக்க வலியுறுத்தியுள்ளார். இதனால் முதியவருக்கும், 2-வது மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது 2-வது மகன் முதியவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து முதியவர் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார்.

தீக்குளிக்க முயற்சி

அதன் பேரில் நேற்று தாலுகா போலீசார் விசாரணைக்காக முதியவரையும், அவரது 2-வது மகனை அழைத்து உள்ளனர். அங்கு வந்த 2-வது மகனின் மனைவி போலீஸ் நிலையத்தின் முன்பு உள்ள சாலையில் திடீரென உடலின் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

மேலும் அவரது கணவர் போலீஸ் நிலையம் வழியாக சென்ற தனியார் பஸ்சின் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை ஏதுமின்றி சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.

இதனால் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்