மதுபாட்டில்கள் விற்ற கணவன்-மனைவி கைது
ரிஷிவந்தியம் அருகே மதுபாட்டில்கள் விற்ற கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அருகே சிங்காரத்தோப்பில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பகண்டை கூட்டுரோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சிங்காரத்தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தர்மா என்கிற ஜான்பீட்டர் (வயது 38) மற்றும் அவரது மனைவி சகாயராணி (32) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.