அழகர்கோவில்,
மதுரை மாவட்டம் அழகர் மலையில் உள்ள ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ. 22 லட்சத்து 84 ஆயிரத்து 170-ம், தங்கம் 285 கிராம், வெள்ளி 615 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன.
உண்டியல் திறப்பின் போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையர் சுரேஷ், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர் பிரதீபா மற்றும் கோவில் பணியாளர்கள் சேவா சங்கத்தினர் உடன் இருந்தனர்.