மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேடசந்தூர், கொடைக்கானலில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-07-22 01:15 IST

வேடசந்தூர் பஸ்நிலையம் முன்பு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பக்ருதீன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவத்தை கண்டித்து கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மனித நேய மக்கள் கட்சி சார்பில், கொடைக்கானலில் மேற்கு மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்