மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் இக்பால் அகமது தலைமை தாங்கினார். நகர செயலாளர் பயாஸ் முன்னிலை வகித்தார். நகர துணை செயலாளர் அக்பர் வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் நகர தலைவர் தப்ரேஸ் அஹ்மத், மாவட்ட தலைவர் வி.ஆர்.நசீர் அஹ்மத், தலைமை கழக பேச்சாளர் சி.கே.சனாவுல்லா ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், தடுக்க தவறிய பா.ஜ.க. அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
இதில் த.மு.மு.க. மாவட்ட செயலாளர் வி.இசட்.அப்துல் ஷூகூர், மாவட்ட பொருளாளர் செய்யத் சுல்தான், சமூக நீதி படைப்பாளர் சங்க மாநில துணை செயலாளர் சலீம், மாவட்ட துணை செயலாளர் நயீம், நகரமன்ற உறுப்பினர்கள் கலீம், அனீஸ், இம்ரான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் பி.எஸ்.அன்வர் பாஷா நன்றி கூறினார்.