மனுநீதி நாள் முகாம்

சுரண்டை அருகே வீராணத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

Update: 2022-09-28 18:45 GMT

சுரண்டை:

தென்காசி மாவட்டம் கீழவீராணம் மற்றும் அகரம் கிராமங்களில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமுக்கு தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னூலாபுதீன் தலைமை தாங்கினார். வீரகேரளம்புதூர் தாசில்தார் செல்வ சுந்தரி முன்னிலை வகித்தார். தலைமையிடத்து துணை தாசில்தார் மாரியப்பன் வரவேற்றார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், டிராக்டர் கலப்பைகள் வழங்கினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வீல் சேர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி, வீராணம் கிராம பஞ்சாயத்து தலைவர் வீரபாண்டியன், தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் ஜெயபிரகாஷ், கிராம பஞ்சாயத்து செயலாளர் வைத்திலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்