நாங்குநேரியில் மனித சங்கிலி போராட்டம்

நாங்குநேரியில் மாவட்ட மருத்துவமனை அமைக்கக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.;

Update: 2022-06-14 20:12 GMT

நாங்குநேரி:

நாங்குநேரியில் மாவட்ட மருத்துவமனை அமைக்கக்கோரி, நாங்குநேரி வளர்ச்சிக்குழு சார்பில் நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. நாங்குநேரி கண்ணன் தெரு முதல் தபால் நிலையம் வரை அண்ணா சாலை முழுவதும், சாலையோரத்தில் பெண்கள், குழந்தைகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைகளை கோர்த்து மனித சங்கிலியாக நின்றனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்