சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்

திருப்பத்தூரில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

Update: 2022-10-11 17:02 GMT

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இரா.சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் வெற்றிகொண்டான் வரவேற்றார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன், திராவிடர் கழக மாவட்ட இணை செயலாளர் பெ. கலைவாணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர துணை செயலாளர் வெங்கடேசன், காங்கிரஸ் கட்சி முன்னாள் நகர தலைவர் வெங்கடேசன், ம.தி.மு.க. நகர செயலாளர் இளங்கோ உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆனந்தம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்