மனித சங்கிலி போராட்டம்

நெல்லையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

Update: 2022-09-21 19:18 GMT

நெல்லை வண்ணார்பேட்டையில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங்கம், ஓய்வூதியர் சங்கம் மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு கூட்டு குழு சார்பில், மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் ராஜூ போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஏராளமானவர்கள் சாலையோரம் மனித சங்கிலியாக அணிவகுத்து நின்று போராட்டத்தில் பங்கேற்றனர். பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு விற்பதை கண்டித்து நாடு முழுவதும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்