அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மனித சங்கிலி போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

Update: 2022-12-07 19:38 GMT

அண்ணாமலை நகர், 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தொகுப்பூதியர் மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள பதவி உயர்வுகள், பணப்பயன்களை ஆசிரியர், ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு அனைத்து பணப்பயன்களையும் வழங்கிட வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முதல் தொலைதூர கல்வி இயக்ககம் வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நின்றபடி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார்.இணை ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன், ஆ.ரவி, மனோகர், பேராசிரியர்கள் சுப்பிரமணியன், செல்வராஜ், செல்ல.பாலு, பாஸ்கர், இளங்கோ உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்