சமூக நல்லிணக்க மனித சங்கிலி

சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது.;

Update: 2022-10-11 19:25 GMT

தமிழகம் தழுவிய சமூக நல்லிணக்க மனித சங்கிலி நேற்று கரூர் பஸ்நிலையம், காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், சமூக அமைதி போன்றவற்றை முன்னிறுத்தி மேற்படி மனித சங்கிலி நடைபெற்று வருவதாக பேசினர். மேலும் இந்த மனித சங்கிலியில் கலந்து கொண்டவர்கள் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணி, நகரத் தலைவர் ஸ்டீபன் பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு மற்றும் ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தி.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்