வள்ளியூரில் மனித சங்கிலி

வள்ளியூரில் மனித சங்கிலி நடைபெற்றது

Update: 2022-10-11 22:02 GMT

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் பழைய பஸ் நிலையம் எதிரில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினை சேர்ந்தவர்கள் பங்கு பெற்றனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. புதிய கல்விக் கொள்கையை திணிக்காதே என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, வி.சி.க., ம.தி.மு.க., பா.ம.க., தி.க., காங்கிரஸ் மற்றும் சமூக நல அமைப்பு தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்