அரசு பணியாளர்கள் சங்கத்தினர் மனித சங்கிலி
கிருஷ்ணகிரியில் அரசு பணியாளர்கள் சங்கத்தினர் மனித சங்கிலி நடத்தினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக்கோரி நேற்று மாலை மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அம்பி வரவேற்றார். சிவக்குமார், பழனிச்சாமி, வடிவழகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பரமேஸ்வரன், நிர்வாகிகள் மோமீன்கான், நாகேஷ், சங்கர், அம்சபாண்டி, மஞ்சுபாய் ஆகியோர் மனித சங்கிலி குறித்து பேசினர். முடிவில் நிந்தியானந்தன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு வழங்கியது போல், 2021 ஜூலை 1 முதல் அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கிட வேண்டும். ஒப்புவிப்பு விடுப்பு ஊதியம் பெறுவதற்கான தடைகளை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியம் அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் 2003 ஏப்ரல் 1-க்கு முன்னர் பணியில் சேர்ந்து பின்னர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். டாஸ்மாக் பொது வினியோகத்திட்டத்திற்கு தனித்துறை உருவாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினார்கள்.