கோடைகாலத்தில் கோழிகளை பராமரிப்பது எப்படி?

கோழிப்பண்ணையாளர்கள் கோடைகாலத்தில் கோழிகளை பராமரிப்பது எப்படி? என ஆராய்ச்சி நிலையம் விளக்கம் அளித்து உள்ளது.

Update: 2023-03-10 18:45 GMT

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இன்று, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மற்றும் 14-ந் தேதி என 3 நாட்களுக்கு மணிக்கு 4 கி.மீட்டர் வேகத்திலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 15-ந் தேதி மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும். மேலும் இன்று தெற்கு திசையில் இருந்தும், நாளை தென் மேற்கு திசையில் இருந்தும், நாளை மறுநாள் மற்றும் 14-ந் தேதி மேற்கு திசையில் இருந்தும், 15-ந் தேதி வடக்கு திசையில் இருந்தும் காற்று வீசும்.

இதனிடையே வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 66.2 டிகிரியாகவும் இருக்கும். இதனிடையே காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 80,90,90,80,80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 30,20,30,30,30 சதவீதமாகவும் இருக்கும்.

தடுப்பூசி

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படுவதோடு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இதனிடையே கடந்த வாரம் இறந்த கோழிகள் வெள்ளை கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது.எனவே பண்ணையாளர்கள் தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளை கையாள்வதோடு, வெள்ளை கழிச்சல் நோய்க்கான ஊநீர் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப சீரான இடைவெளியில் தடுப்பூசி அளிக்க வேண்டும்.

அதேபோல் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாளுவதோடு வெயிலின் தாக்கத்தை குறைக்க தெளிப்பானை உபயோகிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்