தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?

தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

Update: 2023-07-25 18:53 GMT

வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நன்செய் புகழூர் தவுட்டுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் வீடுகளில் சமையல் எரிவாயு மற்றும் எண்ணெய் காரணமாக தீவிபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணைப்பது என்பது குறித்தும், தீ விபத்து மற்றும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை எவ்வாறு மீட்பது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். ஆடைகளில் தீப்பற்றிக்கொண்டால் கம்பளி, கனமான போர்வை போன்றவற்றை போர்த்தி தரையில் உருள வேண்டும். புகை சூழ்ந்த இடங்களில் மூக்கில் ஈரத் துணியை கட்டிக்கொண்டு தவழ்ந்து வெளியேற வேண்டும். பீடி, சிகரெட், சுருட்டு துண்டுகளை புகைத்த பின் அணைக்க வேண்டும். வாயுக்கிடங்கு, பெட்ரோல் நிலையம் ஆகிய இடங்களில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. அணையாத புகைப் பொருட்களை குப்பையில் கொட்ட கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை கூறினர். இதில், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்